தீர்த்தஸ்வர சுவாமி கோவிலில் நவராத்திரி விழா
ADDED :4416 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர், திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை தீர்த்தஸ்வர சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது. திருவள்ளூர், தேரடி அருகே, திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை தீர்த்தஸ்வர சுவாமி கோவில் அமைந்து உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு, இந்த ஆண்டும், நவராத்திரி விழா, நேற்று முன்தினம் காமாட்சி அலங்காரத்துடன் துவங்கியது. நேற்று மீனாட்சி அலங்காரம் நடைபெற்றது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, தினமும் சுவாமிக்கு காலை 8:00 மணிக்கு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனையும் நடைபெறும். தொடர்ந்து, ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும்.