உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்வார் திருமாளிகை

ஆழ்வார் திருமாளிகை

திருப்பதி மலையின் அடி வாரத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது ஆழ்வார் தீர்த்தம். மூலிகைச் செடிகள் பட்டு வரும் நீர் என்பதால் மருத்துவகுணம் கொண்டது. குளக்கரையில் சிற்பவேலைப்பாடுடன் ஒரு கல்மண்டபம் உள்ளது. இதனை திருமாளிகை என்பர்.  நம்மாழ்வார் இதில் தங்கியுள்ளார். முதலாம் குலோத்துங்கன் இதைக் கட்டினார். அந்தக் காலத்தில் மலைமீதுள்ள வெங்கடாஜலபதிக்கு அபிஷேக தீர்த்தம் இக்குளத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.  இந்த தீர்த்தத்தை தெலுங்கு, கன்னடத்தில் சக்கரதீர்த்தம் என்கின்றனர். தற்போது கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தம் பயன் படுத்தப்படுகிறது. திருப்பதி மலை  உச்சியிலும் ஒரு சக்கரதீர்த்தம் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !