பாட்டிக்கு மோட்ச ஓலை
ADDED :4778 days ago
ஏழுமலையானை தரிசித்த ராமானுஜர், திருமலையில் இருந்து கீழ்திருப்பதிக்கு இறங்கிக் கொண்டிருந்தார். வழியில் பாட்டி ஒருத்தி அவரிடம், தனக்கு மோட்சம் அருளும்படி வேண்டினாள். ராமானுஜரோ, தாயே! மோட்சம் கொடுக்க என்னால் எப்படி முடியும்! என்று கேட்டார். பாட்டி அவரிடம், சரி...உம்மால் முடியாவிட்டால் பரவாயில்லை! ஒரு ஓலையில் மோட்சம் கொடுக்கக் கடவது! என்று எழுதிக் கொடுத்தால் போதும், என்றாள். அவளது பேச்சை ஏற்ற ராமானுஜரும் அப்படியே ஓலையில் எழுதிக் கொடுத்தார். நன்றியுடன் அவரை வணங்கிய பாட்டி ஓலையுடன் திருமலை மீது ஏறினார். திடீரென்று பெருமழை பெய்யத் தொடங்கியது. பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிக்கிய பாட்டிஉயிரிழந்தாள். அவளை விஷ்ணுதூதர்கள் திருநாடு என்னும் வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர். பாட்டி மோட்சம் பெற்றாள்.