வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :4740 days ago
கடலூர்: கடலூர், கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது, கடலூர், ஜட்ஜ் பங்களா ரோட்டில், எஸ்.பி., அலுவலகம் எதிரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், வாஸ்துசாந்தி மற்றும் புற்று மண் எடுக்கப்பட்டது. நேற்று காலை கொடியேற்றுவிழா நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. மாலை, சுவாமி மாடவீதியுலா நடந்தது. வரும் 12ம் தேதி மாலை 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.