கிருஷ்ணரிடம் இல்லாதது எது?
ADDED :4773 days ago
ஒரு சமயம் பகவான் கிருஷ்ணர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசனம் அளிக்கும் பொருட்டு வீதியுலா வந்தார். அப்போது அவருக்கு பக்தர்கள் பழம், பூவுடன் கற்பூர ஆரத்தி காட்டினார்கள். ஆனால் ஒரு பெரியவர் மட்டும் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. அவரை ஸ்ரீகிருஷ்ணன் அழைத்து நீ ஏன் எனக்கு எதுவும் படைக்கவில்லை என்றார். அதற்கு பெரியவர், எல்லாமே நீ கொடுத்தவைதானே? உன்னிடம் இல்லாததைத்தானே நான் படைக்க வேண்டும்? என்றார் அதற்கு பகவான், என்னிடம் இல்லாதது எது? என்று கேட்டார். பகவானே! பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் நீ சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போது, உன் மனதை அவர்கள் எடுத்துக் கொண்டு விட்டார்கள். ஆதலால் உன் மனம் உன்னிடத்தில் இல்லை. அதற்குப் பதில் நான் என் மனதை உனக்குக் கொடுக்கிறேன் என்றார் பெரியவர். பகவானால் பதில் சொல்ல முடியவில்லை.