அம்மன் கோயிலில் ஐந்து மரங்கள்!
ADDED :4773 days ago
திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து சேரன்மா தேவி செல்லும் சாலையில் நரசிங்க நல்லூர் கடந்தால், தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தில் வலப்புறம் உள்ளது ஊருது மலை அம்மன் கோயில். சுமார் ஆறுநூறு வருடங்களுக்கு முற்பட்ட இக்கோயிலில் பூச்செண்டு, அட்சயபாத்திரம் தாங்கி, பாதத்தினை தாமரை மலரில் வைத்தவாறு அமர்ந்த வடிவில் காட்சியளிக்கிறாள் அம்பிகை. அம்மனின் பார்வைக்கு நேர் எதிரே, இரண்டு முருங்கை மரங்கள், வேம்பு, ஆல், அரசு மரங்கள் தலா ஒன்று. ஆக ஐந்து மரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுபோல் வளர்ந்திருக்கின்றன. பஞ்ச விருட்சங்கள் உள்ள இத்தலம் வந்து வழிபடுவோரின் நெஞ்சம் இனிக்கச் செய்வாள் ஊருதுமலை அம்மன் என்பது நம்பிக்கை.