ஆகாச தேவதை
ADDED :4773 days ago
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்காவில் உள்ளது ஊத்துக்காடு எல்லையம்மன் கோயில், திருமணம் கைகூட, நோய்கள் நீங்க தொழில்வளர்ச்சி காண என பல்வேறு கோரிக்கைகளுக்காக பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து, பொங்கலிட்டு வேண்டுகின்றனர். புத்திரப்பேறு வேண்டிடும் பக்தர்கள், கோயிலருகே உள்ள அலரி மரத்தில் தொட்டில் கட்டி வணங்குகின்றனர். தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மஞ்சள் நீரினை ஊற்றிக்கொண்டு, ஈர ஆடையுடன் வந்து, இங்குள்ள ஆகாச தேவதையை ஆராதிக்கின்றனர்.