பள்ளக்கால் யோகநரசிம்மர்
ADDED :4773 days ago
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலுள்ளது பள்ளக்கால் கிராமம். இங்குள்ள ஆற்றங்கரையில் யோகநரசிம்மர் கோயில் உள்ளது. ஒருமுறை மழை பெய்து, ஆற்றில் வெள்ளம் வந்ததால் கோயில் மூழ்கி விட்டது. வெள்ளம் வற்றிய பின், ஒரு பக்தரின் கனவில் தோன்றிய நரசிம்மர், தன்னை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படியே செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. மீண்டும் கோயில் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து விட்டது. செல்லும் பாதையும் சீராக இல்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயில் அழியும் முன் பாதுகாப்பது அரசு மற்றும் பக்தர்களின் கடமை.