உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவலிங்கத் தத்துவம்!

சிவலிங்கத் தத்துவம்!

அருவுக்கும் உருவுக்கும் காரணமாக விளங்குவது சிவலிங்கம். மாலும் அயனும் பிணங்கியபோது, இடையில் ஜோதி வடிவமாய் நின்ற குறிப்பும் சிவலிங்கத்தையே குறிக்கிறது. இறைவன் ஜோதி வடிவானவர். ஜோதி மேல் நோக்கி நிற்கின்றது. அது ஆன்மாவில் உயிருக்குயிராய் விளங்குகிறது. ஆன்மா அறிவுப்பொருள். ஆன்மாவுக்கும் சிவத்துக்கும் இடையில் அருள் ஒளிர்கின்றது. ஆன்ம ஜோதி, அருட்ஜோதி, சிவஜோதி என்ற இம்மூன்றும் ஒன்று கூடியதே சிவலிங்கம். சிவலிங்கத்தின் அடிவட்டம் ஆன்மஜோதி. சிவலிங்கத்தைச் சூழ்ந்திருக்கின்ற ஆவுடையார் அருட்ஜோதி. மேல் நோக்கியிருக்கிற பாணம் சிவஜோதி. இந்த மூன்றும் சேர்ந்து நமக்கு சிவலிங்கமாகக் காட்சியளிக்கின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !