கொழுமடை தர்மசாஸ்தா
ADDED :4773 days ago
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்கு அருகில் உள்ள கிராமம், கொழுமடை. பரசுராமர் நடந்து வருகையில், அவர் கொழுவினால் தட்டித் தட்டி உண்டான இடம் என்பதால் இந்தப் பெயர் வந்தது என்கிறார்கள். இங்குள்ள தர்மசாஸ்தா, வரப்பிரசாதியானவர். தச்சநாதர் என்றும் இவரை சிறப்பிப்பார்கள். சுவாமியைச் சுற்றிலும் காவல் தெய்வங்களாக கருப்பசாமி, காத்தவராயன், பொம்மக்கா, திம்மக்கா, வன்னியராஜா, வனப்பேச்சியம்மா, இசக்கியம்மன், தளவாய்மாடன், மாடத்திகள், சுடலைமாடசாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இந்த சாஸ்தாவுக்கு வலப்புறத்தில் நாகரும் அம்பாளும் அமைந்துள்ளதாக ஐதீகம். இந்தக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதி இல்லை.