உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலத்தூர் மதுநாதர்

இலத்தூர் மதுநாதர்

தென்காசியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர் மதுநாத சுவாமி ஆலயம். இங்கு, புளிய மரத்தடியில் மணலில் லிங்கம் அமைத்து அகத்திய முனிவர் வழிபட்டார் என்று கூறப்படுகிறது. அந்த மரத்தில் இருந்த தேன்கூட்டில் இருந்த தேன், லிங்கத்திருமேனியில் விழ... சிலிர்த்த அகத்திய முனிவர், மதுநாதா என சிவனாரை அழைத்ததால், இந்தத் தலத்து ஈசனுக்கு மதுநாதர் எனும் திருநாமம் அமைந்தது! இங்கே, தட்சிணாமூர்த்தி, கருவறை விமானத்தின் கீழே, தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். அதேபோல், சனி பகவான், அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தருகிறார். சனி தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் குரு ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது இந்தத் திருத்தலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !