உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் கடையில் மது பாட்டில், பிரியாணி!

பழநி மலைக்கோயில் கடையில் மது பாட்டில், பிரியாணி!

பழநி: பழநி மலைக்கோயில் யானைப்பாதையிலுள்ள கடை ஒன்றில், பிரியாணி, மது பாட்டில் வைத்திருந்தவர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பழநி மலைக்கோயில், படிப்பாதை, யானைப்பாதையில் சிலர் கடை வைத்துள்ளனர். நேற்று ஒரு சிலர், கடையில் மது குடித்துவிட்டு அசைவ பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இவர்கள் குறித்து அடிவாரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், வழக்கு பதிவு செய்த பழநி அடிவாரம் போலீசார், கடையில் வேலைபார்த்த தாராபுரத்தைச் சேர்ந்த குமார், 22 என்பவரை கைது செய்தனர். பழநிகோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்;"" கோயிலில் மது, மாமிசம் சாப்பிடக்கூடாது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும். பக்தர்கள் வசதியாக சென்றுவரும் வகையில் விரைவில் படிப்பாதை, யானைப்பாதையில் உள்ள அனைத்து கடைகளும் அகற்றப்படவுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !