உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா!

மதுரை இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா!

மதுரை: மணிநகரம் இஸ்கான் கோயிலில் நாளை முதல் தாமோதரத் தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவரும் தங்கள் கரங்களால் தாங்களே நேரடியாக சுவாமிக்கு தீப ஆரத்தி காட்டலாம். தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த விழா நவம்பர் 17ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும்.  விழாவின் விசேஷ நாள்களான அக்டோபர் 20, 27, நவம்பமர் 2, 3, 10, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என இஸ்கான் கோயில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !