உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் பகுதி கோயில்களில் இன்று அன்னாபிஷேகம்

கடையம் பகுதி கோயில்களில் இன்று அன்னாபிஷேகம்

ஆழ்வார்குறிச்சி: கடையம் வட்டார சிவன் கோயில்களில் இன்று (18ம் தேதி) அன்னாபிஷேகம் நடக்கிறது. நாடு செழித்திடவும், மக்கள் நலமுடன் வாழ்ந்திடவும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இன்று (18ம் தேதி) கடையம் வில்வவனநாதர் சமேத நித்யகல்யாணி அம்பாள் கோயில், கைலாசநாதர் சமேத பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், சிவசைலம் சிவசைலநாதர் சமேத பரமகல்யாணி அம்பாள் கோயில் உட்பட கடையம் வட்டார சிவன் கோயில்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. காலையில் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து விசேஷ பூஜை, அன்னாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !