சிதம்பரம் நடராஜருக்கு மகாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED :4696 days ago
சிதம்பரம்: நடராஜர் கோயில் சித்சபையில் உள்ள மூலவரான நடராஜருக்கு கனகசபையில் வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. நடராஜப்பெருமான் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையிலிருந்து கனகசபைக்கு எழுந்தருளினர். பின்னர் அவர்களுக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர் பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜா, சிவ, சிவ என கோஷமிட்டு தரிசித்தனர். இரவு 11.00 மணிக்கு மகாபிஷேகம் முடிவுற்றது.