கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி விழா
ADDED :4429 days ago
கன்னியாகுமரி: பகவதியம்மன் கோவிலில் இன்று ஐப்பசி பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், நிர்மால்ய பூஜையும் நடைபெறும். முற்பகல் 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பிற்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும்.