அகண்ட காவிரியில் ஐப்பசி முதல் தேதியான இன்று புண்ணிய நீராடுதல்
ADDED :4429 days ago
ஐப்பசி முதல் நாளில் திருச்சி அருகே திருப்பராய்த்துறையிலும், கடைசிநாளில் மயிலாடுதுறையிலும் காவிரியாற்றில் நீராடுவது விசேசமானது. அதன்படி திருப்பராய்த்துறை அகண்ட காவிரிப் பகுதியில் புண்ணிய நீராடுதல் பெருவிழா இன்று நடைபெறுகிறது.
திருப்பராய்த்துறை அருள்மிகு பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேசுவரர் ரிஷப வாகனத்தில் காவிரியாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். காலை 6.30 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் நீராடலாம்.