திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் கிரிவலம்
ADDED :4429 days ago
கடலூர்: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை வீரட்டானேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 6 முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 முதல் 12 மணிவரையில் ஊஞ்சல் உற்சவமும், இரவு 11 முதல் 12 மணிவரையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.