ஈஸ்வரன் கோவிலில் அன்னாபிஷேக விழா: ஏரளாமான பக்தர்கள் பங்கேற்பு
திருச்செங்கோடு: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏரளாமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், கைலாசநாதர், கூட்டபள்ளி காலனியில் உள்ள சவுந்திநாயகி சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.விழாவை முன்னிட்டு, அக் 18 காலை, 10 மணிக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ஸ்வாமி அன்னாபிஷேகத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மரகதலிங்கத்திற்கு யாக பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யபட்டது. ருத்ர ஹோமம், 16 வகையான திரவியங்களால் மஹா அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.
* ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் நடந்த விழாவில், காலை, 9 மணிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 200 கிலோ அன்னத்தால், ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* மோகனூர் அடுத்த என்.புதுப்பட்டி வடக்குமேடு குபேர ஈஸ்வர் கோவிலில், காலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பகல், 12 மணிக்கு, ஸ்வாமி அன்னாபிஷேகத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.அதேபோல், மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில், பெரியமணலி நாகேசுவரர் கோவில், முத்துகாபட்டி காசிவிஸ்வநாதர் கோவில், ஏ.கே.சமுத்திரம் ஆவுடையார் கோவில், ப.வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏரளாமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.