உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடியில் நவராத்திரி விழா நிறைவு

இளையான்குடியில் நவராத்திரி விழா நிறைவு

இளையான்குடி : இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் நவராத்திரி விழா புஷ்ப பல்லக்கு வீதி உலாவுடன் நிறைவடைந்தது. இக்கோயிலில் ஆயிர வைசிய சபை சார்பில் , நவராத்திரி விழா அக்.5 ல் துவங்கி நடந்து வந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. அம்மன் காமாட்சி , உக்கிரபாண்டியன் பிறப்பு , ராஜாங்க சேவை , அன்னபூரணி , மகாலெட்சுமி , மீனாட்சி , மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அக.11 ல் 108 திருவிளக்கு பூஜையும் , அக்.14 ல் இரவு 8 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி , கோயில் முன்புள்ள பொட்டலில் அம்பு விட்டார் . அக்.15ல் பால்குடமும் , அக்.16ல் ஊஞ்சலும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் , ஆயிர வைசிய சபையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !