உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி வாய்ந்த பரிகார சுலோகம்!

சக்தி வாய்ந்த பரிகார சுலோகம்!

தர்மபுரி மின்நகர், பாரதிபுரத்தில் உள்ள வலம்புரி விநாயகர் கோயிலிலும் ஜெய்ப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சம்மோகன கிருஷ்ணனின் பளிங்குச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அழகானவன் பாலகிருஷ்ணன்; சகியுடன் இணைந்து அதீத அழகானவன், சம்மோகன கிருஷ்ணன்! இத்திருக்கோயிலில் வலம்புரி விநாயகர் நடு நாயகமாக வீற்றுள்ளார். காசி விஸ்வநாதர், வள்ளி, தேவசேனா சமேத முருகன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேங்கடேசப் பெருமாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பஞ்சமுக ஆஞ்சநேயர், பஞ்சமுக காயத்ரி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். மரீசி மகரிஷி, ராதாகிருஷ்ண தெய்வீக இணைப்பின் சக்தியையும் ரகசியத்தையும் உணர்ந்து கடுந்தவமியற்றி, இந்த சம்மோகன கிருஷ்ணனாகத் தரிசிக்கும் பேறு பெற்றார். அந்த தரிசனத்தால் பரமானந்தமடைந்த மரீசி மகரிஷியின் வாக்கிலிருந்து வெளிப்பட்டது தான் சம்மோகன கிருஷ்ணரின் ஸ்லோகம்.  இந்த ஸ்லோகம் அளவற்ற சக்தி வாய்ந்தது. முக்கியமாக கணவன் மனைவியரிடையே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் ஏராளமான பிரச்னைகளைத் தீர்த்து தம்பதியர் ஒற்றுமை மேம்பட வழி வகுக்கும் சக்தி வாய்ந்த பரிகார சுலோகமாக இது விளங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !