உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணலான உணவுப் பொருட்கள்!

மணலான உணவுப் பொருட்கள்!

மணமாகாத இளம்பெண்ணால் தனக்கு மரணம் என்பதே பாணாசுரனின் வரம். அதற்காகவே வெளிப்பட்ட அம்பிகை, சுசீந்தரம் தாணுமாலயப் பெருமானை மணக்கும் சூழல் வாய்த்தது. அது நடந்தால் , அசுரனை மாய்க்க முடியாதே என்று கலகம் செய்தார் நாரதர். அதன்படியே திருமணம் நின்றது: அசுர வதம் நிகழ்ந்தது. சரி: இந்தத் திருமணத்திற்காக ஏராளமான உணவு வகை தயாரிக்கப்பட்டது. திருமணம் நின்று போனதால்,  கோபம் கொண்ட தேவி அவற்றை மணலாக மாற்றினாள். இதன் சான்றாக இன்றும் கன்னியாகுமரி கடற்கரையில் முழு அரிசி, நொறுங்கிய அரிசி, தவிடு போன்ற வடிவில் சிறு மணலும் பலவண்ண மணலும் மிகுந்து கிடப்பதைக் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !