பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை தினமும் எத்தனை முறை சொல்ல வேண்டும்?
ADDED :4765 days ago
காலை குளித்த பிறகு 108 முறை, மதியம் சாப்பிடும் முன் 108 முறை, மாலை விளக்கேற்றும் வேளையில் 108 முறை ஜபம் செய்ய வேண்டும். இதுவல்லாமல் இயன்ற நேரமெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்றார் சுந்தரர். வேறு பல வேலைகளில் ஈடுபட்டு மனம் இறைவனை மறந்திருந்தாலும் நமது நாக்கு அவனது திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.