உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் மதுரையில் ஆன்மிகச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா?

சுற்றுலாப் பயணிகள் அதிகரிக்கும் மதுரையில் ஆன்மிகச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படுமா?

மதுரை நகருக்கு கடந்த  கடந்த ஆண்டு (2012) 82 லட்சம் பேர் வந்ததில் 85 ஆயிரம் பேர் வெளிநாட்டவர் எனக்கூறப்படுகிறது. மதுரை நகருக்கு ஆண்டுக்கு ஆண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் நகரில் விடுதிகள், உணவகங்கள், ஆட்டோ, கார் மற்றும் சைக்கிள் ரிக்ஷõ உள்ளிட்ட தொழில்கள் வளர்ந்துள்ளன. ஆன்மிக, வரலாற்று ரீதியாக பெருமைமிக்க மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுலாத் திட்டம் மூலம் மேம்படுத்தினால், அங்குவரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் அப்பகுதி மக்கள் பயனடைவர். இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி தர்மராஜிடம் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்பேரில் பல சுற்றுலாத் திட்டங்கள் தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கையை ஆட்சியர் ஆலோசனை பெற்று பரிசீலிப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !