திருப்பதி கோயிலுக்கு அருகில் பல்கலை: இந்து அமைப்புகள் எதிர்ப்பு!
ADDED :4365 days ago
மதுரை: திருப்பதி கோயிலுக்கு அருகில் ஒரு பல்கலை., யின் கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது, என இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. திருப்பதி ஏழுமலையான் இந்துக்களின் இஷ்டதெய்வம். இக்கோயிலில் அருகில் ஒரு பிரிவினர் பல்கலை., அமைப்பதற்கான கட்டுமான வேலைகளை துவக்கியுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும், என வலியுறுத்தி மதுரையில் இந்து அமைப்புகள் சார்பில் கூட்டு போராட்டம் நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் மற்றும் பல அமைப்புகளை சேர்ந்த முத்துராஜ், ஆதிஷேசன், செந்தில், பார்த்தசாரதி, ராம்தாஸ், சுப்பிரமணியன், சுந்தரவடிவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.