திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நவ., 3ம் தேதி துவக்கம்
ஈரோடு: ஈரோடு, திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, 3ம் தேதி காலை, 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 4ம் தேதி காலை, 9 மணிக்கு ஷடாச்சர ஹோமம், யாக பூஜைகள் நடக்கிறது. 5ம் தேதி காலை, 9 மணிக்கு ருத்ரபாராயணம், சங்காபிஷேகம், சத்ரு சம்ஹார யாகமும், 6ம் தேதி காலை, 9 மணிக்கு ஷண்முகார்ச்சனையும், 7ம் தேதி சுப்ரமணிய பிரசந்ந மாலா மந்திர ஹோமம் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, 9 மணிக்கு யாக பூஜை, பால் அபிஷேகமும், பால் குட கிரிவலமும், பகல், 12 மணிக்கு அன்னதானமும், மாலை, 6 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. விழா நாட்களில், விரதம் இருப்பவர்கள் கோவிலில் காப்பு கட்டி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும், 9ம் தேதி காலை, 8.30 மணிக்கு கல்யாண உற்சவ பூஜைகள் ஆரம்பமாகிறது. அதன் பின் வள்ளி, தெய்வநாயகி சமேத வேலாயுதசாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு அன்னதானமும், மாலை, 5 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலையுடன் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். ஏற்பாடுகளை உதவி ஆணையர் சபர்மதி, செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்கின்றனர்.