சிறப்பு அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் வீதியுலா
ADDED :4439 days ago
திண்டிவனம் : திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் அக் 31 மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தில் கட்டப்பட்டுள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு கடந்த செப்., 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அக் 30, மண்டலாபிஷேக பூர்த்தி விழா, கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ள பரிவார மூர்த்திகள் பாலமுருகர், ஆதிபராசக்தி, தட்சணா மூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா, பிரம்மா, நாகாத்தம்மன், நவகிரகங்கள் சன்னதிகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு, இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.