குன்றக்குடியில் சூரசம்ஹாரம்
ADDED :4406 days ago
காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் கந்த சஷ்டி விழா, கடந்த 3 ம் தேதி காப்புகட்டுடன் தொடங்கியது. விழாநாட்களில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், திருவீதி உலா நடந்தது. கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் நேற்று நடந்தது.முன்னதாக மதியம் ஒரு மணிக்கு, சுவாமி மலையிலிருந்து கீழிறங்கி அன்னை பார்வதியிடம், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சிநடந்தது. தொடர்ந்து வெள்ளி ரதத்தில், வள்ளி தெய்வானையுடன் புறப்பாடாகி, மலையை சுற்றி வந்து, மாலை 6.15 மணியளவில், வேல் மூலம் சூரனை வதம் செய்தார். இன்று இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.