வயலூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்
ADDED :4464 days ago
திருச்சி: வயலூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 3–ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. காலை சண்முகா அர்ச்சனையும், சிங்காரவேலவர், ஆதிநாயகியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன் பின்னர் சிங்காரவேலவர் சூரன் முன்பு வந்தவுடன் சூரன் ஆக்ரோஷமாக சிங்காரவேலவரை ஒரு முறை வலம் வந்து சிங்காரவேலவர் முன்பு எதிர்த்து நின்றார். சிங்காரவேலவர் சக்திவேலால் சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.