உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருச்சிகம்: மகிழ்ச்சியான மாதம்!

விருச்சிகம்: மகிழ்ச்சியான மாதம்!

செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!
நிழல் கிரகமான கேது 6ம் இடத்தில் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.உங்கள் ராசி நாயகன் செவ்வாய், தற்போது 10ம் இடத்திற்கு உள்ளார். இதனால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. ஆனால், அவர் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன் உங்களைப் பாதிக்காது. அவர் நவ.30ல் 11ம் இடத்திற்கு செல்வதால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் நன்மை தருவார். அவர் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் இருப்பதால் பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். அதன்பின் 3ம் இடத்திற்கு சென்று குடும்பத்தில் மகிழ்ச்சி தருவார். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செல்வாக்கும், உடல் நலம் பாதிக்கப்படலாம்.புதனும் சாதகமற்ற இடத்தில் உள்ளார். எதிரிகளால் தொல்லை வரலாம். உங்கள் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படலாம். ஆனால் அவர் நவ.28ல் உங்கள் ராசிக்கு வருவதால் வீட்டினுள் சில பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடும், பொருள் இழப்பும் ஏற்படலாம். சிலர் இடமாற்றம் காணலாம். கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. எள், கரும்பு, பனை பயிர்கள் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகம் கிடைக்கும்.புதிய சொத்து வாங்க நவ.30க்கு பிறகு அனுகூலமான காற்று வீசும்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  பெண்களால் குடும்பம் தழைத்து ஓங்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5,6  நிறம்: சிவப்பு, வெள்ளை
நல்ல நாள்: நவ.17,18,19, 25,26,27,28,29, டிச.2,3, 6,7, 13,14, 15.
கவன நாள்: நவ.20,21,22 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். நாக தேவதையை வணங்குங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !