உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் பூட்டை உடைத்து வெள்ளிக்கவசம் திருட்டு

கோவில் பூட்டை உடைத்து வெள்ளிக்கவசம் திருட்டு

வாலாஜாபாத்: முத்தியால்பேட்டை பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில், பூட்டை உடைத்து, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். காஞ்சிபுரம், முத்தியால்பேட்டையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள், கேட்டின் பூட்டை உடைத்து உள்ளிருந்த 2 கிலோ வெள்ளி கவசங்களை திருடியுள்ளனர். உண்டியலை உடைத்து, பணத்தை திருடியுள்ளனர். வாலாஜாபாத் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !