கோவில்பட்டி கதிரேசன் கோயிலில் புஷ்பாஞ்சலி
ADDED :4349 days ago
கோவில்பட்டி: கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் மலைக்கோயிலில் புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் மலைக்கோயிலில் புஞ்பாஞ்சலி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலையில் நடைதிறக்கப்பட்டு மூலவர் கதிர்வேல் முருகன் மற்றும் பழனியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலையில் கார்த்திகேயன் ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் புஞ்பங்கள் கோயில் பிரகாரத்தில் வலமாக கொண்டு வரப்பட்டு மூலவரான கதிர்வேல் முருகனுக்கு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் கட்டளைதாரர்கள் அருணாசலம், கோல்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ எம்எல்ஏ மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.