தலையில் தீபம் சுமந்து கார்த்திகையில் வழிபாடு
ADDED :4378 days ago
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் புது மண் சட்டியில் தீபம் ஏற்றி தலையில் சுமந்து வழிபட்டனர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் வழிபடும் பக்தர்கள் காது வலி, தலை வலி, கண் வலி போன்றவை நீங்க, புதிய மண் சட்டியில், பச்சரிசி மாவில் மாவிளக்கு ஏற்றி, தலையில் சுமந்து சென்று வழிபட்டனர். இந்த நிகழ்வு ஐந்து வாரங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும்.