விராலிமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
ADDED :4371 days ago
விராலிமலை: விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை பெரு விழா சிறப்பாக நடக்கும். மலைமேல் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மலைமேல் தீப கோபுரத்தில் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றினர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.