உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீ மிதித்த அய்யப்ப பக்தர்கள்

தீ மிதித்த அய்யப்ப பக்தர்கள்

ஊத்துக்கோட்டை: அய்யப்ப மாலை அணிந்த பக்தர்கள், 6ம் ஆண்டு தீ மிதித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது, அரிகரசுதன் அய்யப்ப சுவாமி கோவில். இங்கு, ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம் 1ம் தேதி அன்று, தீமிதி திருவிழா நடைபெறும். மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள் தீ மிதிப்பர். நேற்று முன்தினம், இக்கோவிலில், அய்யப்ப பக்தர்கள் தீமிதித்தனர். அப்போது கூடியிருந்தவர்கள், சுவாமியே சரணம் அய்யப்பா என, சரண கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !