வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழா
ADDED :4348 days ago
மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழா கடந்த இரு நாள்களாக (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இக் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமியில் இருமுடி செலுத்துதல், நெய் அபிஷேகம், தீபஜோதி ஏற்றுதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், கோமாதா பூஜை போன்றவை நடைபெற்றன. மதுராந்தகம், செங்கல்பட்டு, அவளூர் உள்ளிட்ட 25 பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்ற தொண்டர்கள் இருமுடி செலுத்தி நெய் அபிஷேகத்தை செலுத்துதல், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருக்கோயில் முழுவதும் 1008 தீபத்தை ஏற்றுதல் போன்றவை நடைபெற்றது.