திருக்கழுக்குன்றம் சிவன் கோயில்களில் கார்த்திகைப் பெருவிழா
செங்கல்பட்டு அண்ணாநகர் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகர், ஜிஎஸ்டி சாலை அருள்மிகு சக்திவிநாயகர் கோயில், என்ஜிஜிஓ நகர் சித்தி விநாயகர் திருக்கோயில், ராஜாஜி தெரு ஏகாம்பரேஸ்வரர் கோயில், நத்தம் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அன்று காலை கோயில்களில் பரணி தீபம் ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் மாலை மகாதீபமும் ஏற்றி வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. செங்கல்பட்டு காட்டுநாயக்கன் வீதியில் செம்மலை வேல்முருகன் மலைக்கோயிலிலும் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டது. புலிப்பாக்கத்தில் உள்ள பொன்மலையுடைய நாயனார் நாராயணி அம்பிகை சமேத வியாக்கரபுரீஸ்வரர் திருக்கோயிலில் மலைப் பாதையில் விளக்கு அலங்காரமும், கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அடுத்து சிவசக்தி யாகசாலை பூஜைகள், வியாக்ரபுரீஸ்வரர் நாராயணி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. மாலை மலை உச்சியில் உள்ள தீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.