ஓலை சுவடிகளை பாதுகாக்க சிறப்பு பயிற்சி!
ADDED :4345 days ago
சென்னை: ஓலைச்சுவடி பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகின்றன. ஓலைச் சுவடிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில், சிறப்பு பயிலரங்கு, சென்னை அருங்காட்சியகத்தில், இன்று துவங்குகிறது. இதில், ஓலைச் சுவடிகளை படிப்பது, படியெடுப்பது, பாதுகாப்பது உள்ளிட்டவை கற்றுத் தரப்படும். மேலும், வரலாற்று சிறப்புமிக்க, ஓலைச் சுவடிகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன. கண்காட்சி, இன்று துவங்கி, வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.