தென்காசியில் திருக்குறள் முற்றோதுதல்
ADDED :4337 days ago
தென்காசி: தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் 223-வது திருக்குறள் முற்றோதுதல் வேள்வி நடந்தது. நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பிச்சுமணி துவக்கி வைத்தார். செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் சிவராமகிருஷ்ணன் முற்றோதுதலை துவக்கி வைத்தார். ஆய்க்குடி - கிளங்காடு, வரதய்யன் கிராமம் சுப்பிரமணி சேரிடரி டிரஸ்ட் மாணவிகளும் ஆசிரியைகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்து ஆய்வுரைக்கு மன்ற தலைவர் துரைதம்புராஜ் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தார். நாறும்புநாதன், செல்வராஜ், பழநியப்பன், ஆகியோர் ஒவ்வொரு அதிகாரத்தின் ஆய்வுரையை பற்றி பேசினர். சந்திரசேகரன் நன்றி கூறினார்.