உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கூட்டம் அதிகரிப்பு: பம்பையில் பக்தர்கள் காத்திருப்பு!

சபரிமலையில் கூட்டம் அதிகரிப்பு: பம்பையில் பக்தர்கள் காத்திருப்பு!

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால், பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, நிலைமைக்கேற்ப சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை ஒன்றாம் தேதி நடை திறந்த பின்னர், முதல் ஒரு வாரம் கூட்டம் சுமாராக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. 18ம் படியேறுவதற்கான வரிசை சரங்குத்தியை தாண்டி, அதாவது இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு காணப்படுகிறது. இதனால், நடை அடைத்திருக்கும் நேரங்களிலும் பக்தர்கள் 18ம் படியில் ஏற்றப்படுகின்றனர், பின், இவர்கள் வடக்கு வாசல் வழியாக வந்து சுவாமியை தரிசிக்கின்றனர். இதனால், 2 முறை பக்தர்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று மாலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பம்பை கணபதி கோயிலின் கீழ் புறம் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 18ம் படியேறுவதற்கான வரிசை குறைவதை பொறுத்து, பக்தர்கள் சன்னிதானம் வர அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக சிறிய வாகனங்கள் பம்பையிலும், பெரிய வாகனங்கள் நிலக்கல்லிலும் நிறுத்தப்படுகிறது. நேற்று பம்பையில் சிறிய வாகனங்கள் நிறுத்த இடமின்றி, நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. 4 நாட்கள் இடைவெளிக்கு பின், நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலை 6 மணிக்கு பின் மீண்டும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் பக்தர்கள் சிரமப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !