உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்!

குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்!

பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவத்தையொட்டி, செம்பை சங்கீத உற்சவம், நாளை நடக்கிறது. குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டுதோறும், ஏகாதசி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும், டிச., 13ம் தேதி, வெகுவிமரிசையாக இந்த விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, செம்பை சங்கீத உற்சவம், நாளை, கோவில் வளாகத்தில் உள்ள, மேல்பத்தூர் கலையரங்கில் நடக்கிறது. விழாவில் இந்தாண்டுக்கான, "குருவாயூரப்பன் செம்பை விருது சாக்சோபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத்துக்கு வழங்கப்படுகிறது. இதில், 50 ஆயிரத்து 1 ரூபாய் காசோலையும், மூலவரின் உருவம் பதித்த, 10 கிராம் எடை கொண்ட தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, கத்ரி கோபால்நாத்தின் சாக்சோபோன் சிறப்பு கச்சேரி நடக்கிறது. நவ., 29 முதல், டிச., 13 வரை, கேரள - வெளிமாநில பிரபல இசை கலைஞர்களின் சிறப்பு கச்சேரிகள் நடக்கவுள்ளன. செம்பை சங்கீத உற்சவ கமிட்டி உறுப்பினர்கள், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !