மழை வேண்டி ராமநாமம் பஜனை
ADDED :4443 days ago
கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் மழை பெய்ய வேண்டி ராமநாமம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ராமையா நகரிலுள்ள ஐய்யப்பன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் ஆளவந்தார் பஜனைக்குழுவினர் ராமநாமம் பாடினர். கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் விதை விதைத்து மழைக்காக காத்திருப்பதால் போதுமான மழை பெய்ய வேண்டி பஜனைப்பாடல்கள் பாடப்பட்டது. இதில் முதல்நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை அகண்ட ராமநாமம் ஜெபிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. கோவில்பட்டி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைச் சங்க தலைவர் ராஜேஸ்கண்ணன், பெருமாள்சாமி, ரெங்கநாயகலு, ஆளவந்தான் பஜனைக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.