உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் கோவில்களில் பாதுகாப்பு: நுழைவு வாசலில் சைரன்!

காஞ்சிபுரம் கோவில்களில் பாதுகாப்பு: நுழைவு வாசலில் சைரன்!

காஞ்சிபுரம்: கோவில்களில் திருட்டு சம்பவங்களை தடுக்க, பிரதான நுழைவு வாயில்களில், சைரன் பொருத்த, செயல் அலுவலர்களுக்கு, அறநிலையத் துறை உத்தரவிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவில்களில் திருட்டுக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறநிலைய துறையில், 5 லட்சத்திற்கு மேல் உண்டியல் வருவாய் தரும் கோவில்களில்,பிரதான நுழைவு வாசலில், சைரன் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர்களுக்கு இந்த உத்தரவு சுற்றறிக்கையாக அனுப்பப் பட்டுள்ளது. கோவில்களில் செயல் அலுவலர்கள், சைரன் பொருத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !