பழநி மெட்டீரியல் ரோப்கார் இரண்டாவது வின்ச் நிறுத்தம்!
பழநி: பழநிமலைக்கோயிலுள்ள, மெட்டீரியல் ரோப்கார் மற்றும் இரண்டாம் எண் "வின்ச் ஆகியவை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. பழநிமலைக்கோயிலுக்கு 7 நிமிடத்தில் செல்லும் வகையில், 3 வின்ச்கள் இயங்கப்படுகிறது. இவற்றில் 2 வது "வின்ச் மட்டும் இன்று முதல் 10 நாட்களுக்கு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுகிறது. இந்த நாட்களில், 2 ம் "வின்ச்ல் உள்ள இரும்பு வடக்கயிறு மற்றும் உதிரி பாகங்கள் புதிதாக மாற்றப்படுகிறது. தண்டவாளத்திலுள்ள உருளைகளில் கிரீஸ், ஆயில் மாற்றியும், வின்ச் பெட்டிகள் புதுப்பிக்கப்படவுள்ளன. இதைப்போலவே, மலைக்கோயிலுக்கு காய்கறிகள், பஞ்சாமிர்தம் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்லும் "மெட்டீரியல் ரோப்கார்ல் பராமரிப்பு பணிகள் நேற்றுமுதல் துவங்கியுள்ளது. இதில் 600 மீட்டர் அளவிற்கு கோல்கட்டாவில் வாங்கப்பட்ட புதிய கம்பி வடக்கயிர் மற்றும் பல்சக்கரங்கள், ஆயில், கிரிஸ் மாற்றப்பட உள்ளது.கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம் கூறுகையில், ""மெட்டீரியல் ரோப்காரில் 2 நாட்களில் பணிமுடிந்து, மீண்டும் இயக்கப்படும், ஆண்டு பராமரிப்பு பணிக்காக, 2ம் எண் "வின்ச் நிறுத்தப்படுகிறது. இனிவரும் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், பராமரிப்புகளை முன்னதாக தொடங்கியுள்ளோம், என்றார்.