வீடுகளில் விளக்கு
ADDED :4489 days ago
ஒரு ஐயப்ப பக்தர் மாலை அணிந்ததிலிருந்து அவர் கோயிலுக்கு சென்று திரும்பும்வரை வீட்டுவாசலில் தினமும் விளக்கேற்ற வேண்டும். அந்த விளக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது எரிய வேண்டும். பக்தர் கோயிலுக்கு சென்றபிறகும் வீட்டில் உள்ளவர்கள் அந்த விளக்கை தினமும் ஏற்ற வேண்டும். கோயிலுக்கு சென்ற பக்தருக்கு அந்த ஜோதி வழிகாட்டுவதாக ஐதீகம். பக்தர் திரும்பி வந்தவுடன் ஜோதி ஏற்றிய இடத்தின் அருகில் தேங்காய் உடைத்து சுவாமியே சரணம் ஐயப்பா என முழங்க வேண்டும். அதன்பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும்.