உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய் தத்துவம்

நெய் தத்துவம்

சபரிமலை ஐயப்பன் தனது 12வது வயதில் மனித வாழ்வைத்துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத்தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார். செல்லும் பாதை படுமோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக் காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார். நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டங்களை கொண்டு செல்வார். நெய்ப்பண்டம் அதிகநாள் கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத் தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டுபோகும் பழக்கம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !