உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை மாத வழிபாடு!

கார்த்திகை மாத வழிபாடு!

உலகமெங்கும் பக்தி பரவசம் ஏற்படுத்தும் கார்த்திகை பிறவி வந்து விட்டது. கார்த்திகை பிறந்து விட்டால் பக்தர்கள் மனம் சபரிமலை நோக்கி திரும்பிவிடும். கார்த்திகை பிறந்துவிட்டால் எங்கும் ஒலிக்கும் சரணகோஷம் வரஇருக்கும் மகரசங்கரமத்தை நினைவுபடுத்தும். இல்லறத்தை மறந்து பகவானின் அருள் பெற சரண மந்திரங்கள் ஒலித்து பஜனைகளில் ஈடுபடும் பக்தர்கள் சபரிமலைக்கு சாரைசாரையாக வரதொடங்குவர். கார்த்திகை இரவுகளில் நடத்த வேண்டியது முக்கியமாக ஆழிபூஜையாகும். இந்த ஆழி குண்டத்தில் பொள்ளல் (குறை) ஏற்படாமல் கரையேற பகவானின் அனுக்ரகம் வேண்டும். பகவானின் அருள் விவேகத்தின் வடிவில் பக்தனுக்கு கிடைக்கும். இதற்கு பகவானை உருகி வேண்ட வேண்டும். பகவான் ஐயப்பனிடம் புலிப்பால் கேட்டவர்களுக்கு விருப்பம் போல் கறந்து எடுக்க புலிப்படைகளோடு வந்தார். ஆனால் புலியிடம் பால் கறந்து எடுக்க யாருக்காவது முடிந்ததா? பிரார்த்தனையால், வழிபட்டால் கிடைக்கும் அருளை அனுபவிக்க பகவானின் அருள் வேண்டும்.

பகவானின் அருள் கிடைக்க தியாக மனப்பான்மை வேண்டும். நாம் சேர்ந்து சபரிமலை செல்லலாம் என்ற மனநிலை பக்தர்களுக்கு வரவேண்டும். சபரிமலை யாத்திரையின் விசேஷமே இந்த ஒற்றுமைதான். மனித குலத்தின் ஐக்கியம் சர்வமத சம்மதம். இவையெலல்õம் சபரிமலை உணர்த்தும் பாடங்கள் ஆகும். எல்லா ஐயப்ப பக்தர்களுக்கும் சுகமான தரிசனம் கிடைக்க எல்லாம் வல்ல ஐயப்பன் அருள் புரியட்டும். சுவாமியே சரணம் ஐயப்பா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !