உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பனுக்கு 4 படை வீடு!

ஐயப்பனுக்கு 4 படை வீடு!

*முருகனுக்கு 6 படைவீடு.  அவரது தம்பி ஐயப்பனுக்கு 4 படை வீடு.

*சாஸ்தாவின் கோயில்கள் நான்கும் தெற்கு கேரளாவின் கிழக்கு பகுதியும், தமிழகத்தின் மேற்கு பகுதியும் இணையும் குறிப்பிட்ட இடத்தில் அருகருகே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த 4 கோயில்களும் பூகோளரீதியாக ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. அத்துடன் நான்கு கோயில்களுக்கும் இடையே உள்ள தூரம் சமஅளவில் உள்ளது என்ற செய்தியும் மிகவும் வியப்புக்குரியது.

*அந்த 4 கோயில்களும் தமிழகத்தில் <உள்ள 4 சிவன் கோயில்களை நோக்கி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

*குளத்துப்புழை ஐயப்பன் பாபநாசம் (திருநெல்வேலி) பாபநாச நாதரை நோக்கியும், ஆரியங்காவு ஐயப்பன் குற்றாலநாதரை நோக்கியும், அச்சன் கோயில் அரசன் சங்கரன்கோவில் சங்கரநயினாரை நோக்கியும், சபரிமலை வாசன் விருது நகர் சுந்தரமகாலிங்கத்தை நோக்கியும் அமைந்திருப்பது விசேஷ அம்சமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !