உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் திருப்பணிகள்!

சென்னிமலை முருகன் கோவில் திருப்பணிகள்!

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் தற்போது ÷ஷாபன மண்டபம் கட்டுமான பணிகளும் படு சுறுசுறுப்பாக நட!ந்து வருகிறது. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த சென்னிமலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மீதுள்ள முருகன் கோவிலில், 1.50 கோடி ரூபாய் செலவில், ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் பல்வேறு திருப்பணிகள் கடந்த, 2005ம் ஆண்டு துவங்கி, கடந்த, எட்டு ஆண்டாக நடந்து வருகிறது. ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதில் சுவாமி சிலைகள் வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அதில், 146 உருவங்களை கொண்ட அலங்கார சுவாமி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, பஞ்சவர்ணம் பூசும் பணி துவங்க உள்ளது. 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். தவிர, மலை மீது கோவில் வளாகத்தில், 1.85 கோடியில் புதிதாக மார்க்கண்டேஸ்வரர் சன்னதி மற்றும் காசிவிஸ்வநாதர் சன்னதிகளும் கட்டப்பட்டு, 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிக்காக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள, ஒரு மலைபகுதியில் இருந்து பெரிய, பெரிய கருங்கற்கள் கொண்டு வரப்பட்டு, முழுமையாக கல்லில் வடிவமைக்கப்படுகிறது. புதுவிதமான மதில் சுவர், 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, பல இடங்களில் வேல் மற்றும் மயில் உள்ளது போன்ற தோற்றமும், சிலையாக வடிவமைக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இப்பணிக்கு மட்டும், 36 லட்சம் செலவிடப்படுகிறது. தற்போது ÷ஷாபன மண்டபம் கட்டும் பணி, 29 லட்சம் செலவில், நன்கொடையாளர்கள் உதவியுடன் மிகவும் நவீன யுக்திகளுடன், பழைய மரபுகள் மாறாத வண்ணம், கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் பல ஆண்டாக உள்ள கற்துண்கள் சிலவற்றில், பல சுவாமி சிலைகள் இருப்பதால், இதை அப்படியே மீண்டும் பயன்படுத்தி உள்ளனர். இப்பணிகள் துவங்க ஏதுவாக, சுவாமி தரிசனம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த, கஜலட்சுமி நுழைவு வாயில் அடைக்கப்பட்டு, பக்தர்கள் வசதிக்காக மகாமண்டபத்தின், அந்தராலய வழியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இப்பணிகள், 2014ம் ஆண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன், முன்பு இருந்து அறங்காவலர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்ட நிலையில், இன்னும் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. விரைவில் அறங்காவலர்களை அரசு நியமித்தால், திருப்பணிகள் வேகமாக நடக்க வாய்ப்பு ஏற்படும், என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !