மூன்றுக்குள் 8!
ADDED :4375 days ago
திருமாலின் புகழ் பாடும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் பெருமாள் கோயில்களில் வரிசையாகப் பாடுவது மரபு. இதற்கு காரணம் தெரியுமா?பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு என்பது ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் விளக்கம். மதுரகவியாழ்வார், தன் குருவான நம்மாழ்வார் மீது பாடிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்பது நமோ என்பதைக் குறிக்கும். ஆண்டாளின் திருப்பாவை நாராயணாய என்ற சொல்லுக்கு விளக்கமாக உள்ளது. இந்த மூன்றையும் ஒரே நேரத்தில் பாடினால் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மகாமந்திரத்தைச் சொன்னதாக அர்த்தமாகி விடும்.